Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல நோய்கள் ஒரே மருந்து!

தேவையானவை: வெந்தயம் - 250 கிராம், ஓமம் - 100 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம்.

செய்முறை: மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து, அதை தனியாக கருகாமல் வறுத்து தூள் செய்து, ஒன்றாகக் கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்தக் கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

நன்றி குங்குமம் தோழி

*தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.

*ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

*ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

*இதயம் சீராக இயங்கும்.

*சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

*உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.

*எலும்புகள் உறுதியடைந்து எலும்புத் தேய்மானம் நீங்குகிறது.

*ஈறுகளில் உள்ள பிரச்னைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

*கண் பார்வை தெளிவடைகிறது.

*நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

*மலச்சிக்கல் நீங்குகிறது.

*நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

*பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

*மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

*நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

இந்தக் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

தொகுப்பு: எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.