நன்றி குங்குமம் டாக்டர்
லோங்கான் பழம், சீனாவின் பாரம்பரிய பழமாகும். இதனை சீனர்கள் “டிராகன் கண்” என்றும் அழைக்கின்றனர். இது லிச்சி குடும்பத்தைச் சார்ந்த ஒரு பழமாகும். வட்டவடிவில் பெரிய திராட்சையைப் போன்ற தோற்றத்திலும் இதன் கொட்டை கருப்பு நிறத்திலும் இருக்கும். இது இனிப்பு சுவை கொண்ட வெப்பமண்டல பழமாகும்.
லோங்கான் பழத்தின் நன்மைகள்:
லோங்கான் பழத்தில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
லோங்கான் பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் மன அழுத்தத்தை குறைத்து நல்ல உறக்கத்தை ஊக்குவிக்கின்றன.
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: லோங்கான் பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வாகிறது: பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு லோங்கான் பழம் சிறந்த தீர்வாக அமைகிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது: ரத்தசோகை உள்ளவர்களுக்கு இது நல்லது. உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வயதானவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்கி ரத்த விருத்தியை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: லோங்கான் பழம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது.
தூக்கத்தை மேம்படுத்துகிறது: தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இப்பழத்தைப் பயன்படுத்துவது நல்லது. பழத்தில் மட்டுமல்லாது இதன் இலைகளில் Bio active பண்புகள் இருப்பதால் நரம்பு மண்டல பாதுகாப்பை ஊக்கப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
இப்பழத்தில் பாலிஃபினால் எனும் கெமிக்கல் இருப்பதால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. மார்பு புற்று நோய், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது.
இப்பழத்தில் எபிடெர்சின் மற்றும் எலெக்டிக் அமிலம் இருப்பதால் உடலில் ஏற்படும் சருமம் சம்பந்தமான நோய்கள், குடல் அழற்சி போன்றவற்றைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், காய்ச்சல், ஒவ்வாமை, மற்றும் அழற்சி நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் இப்பழத்தில் உள்ளன.
தொகுப்பு: தவநிதி