Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நாவின் ஆரோக்கியம் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் எண்ணுவதை பேசுவதற்கும், உண்ணும் உணவை பற்கள் மென்று தின்ன சமநிலைப்படுத்தவும் உதவும் ஒரு முக்கிய உறுப்பு நாக்கு.நாக்கு நம் உடலின் நிலையை அப்படியே எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை. நாக்கின் தன்மையை வைத்து உடலில் என்ன பிரச்னை என மருத்துவர்கள் ஓரளவுக்கு கண்டறிந்து விடுவார்கள்.

அதனால்தான் மருத்துவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை முதலில் நாக்கை காட்டச் சொல்லி, பார்க்கிறார்கள். பொதுவாக நம் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் ஏதோ பிரச்னை உள்ளது என அறிந்து கொள்ளலாம்.நாக்கு எல்லா உறுப்புகளோடும் தொடர்புடையது. வைட்டமின் பாதிப்பு தொற்றுநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளை தெரிவித்துவிடும். நாக்கின் நிறம் மட்டுமன்றி அதன் வடிவமும் மேல், கீழ் பகுதிகளும் நோய் பாதிப்பை காட்டும். நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால் வாயில் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.

நாக்கின் நுனி மட்டும் சிவந்திருந்தால் மனஅழுத்தம், கார உணவு சாப்பிட்டதால் சிவந்து போதல், நாக்கின் பின்புறம் சிவந்தால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது என புரிந்துக் கொள்ளலாம்.நாக்கு சிவந்திருந்தால் வைட்டமின் குறைபாடு, மஞ்சள் நிறமென்றால் நீர்ச்சத்து குறைபாடு என்பது தெளிவாகும்.நாக்கு வீங்கியிருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு, நாக்கி்ல் வலி இருந்தால் சர்க்கரை நோய், நாக்கின் இடது மற்றும் வலது பாகங்களில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் பாதிப்பு, நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால் ரத்த சோகை, அடர் சிவப்பு என்றால் உடல் உஷ்ணம், கருப்பு நிற புள்ளிகள் இருந்தால் ரத்த ஓட்டத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

நாக்கை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நாக்கை சரி வர பராமரிக்காவிட்டால் வாய் மற்றும் பல் தொடர்பான பிரச்னைகளை உருவாக்கும்.நாக்கை சாதாரணமாக சுத்தம் செய்யலாம். டங் - க்ளீனர் கொண்டு அமுத்தி சுத்தமாக்கினால் வீக்கம், வலி உண்டாக வாய்ப்புள்ளது. வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வாய், நாக்கு, ஆரோக்யமாகவும், தொற்று ஏற்படாதவாறும் பாதுகாக்கப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதாலும், மிதமான கார உணவுகளை உண்பதாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். நாக்கில் சுரக்கும் உமிழ்நீர் உணவு செரிமானத்திற்கு இன்றியாமையாதது. அடிக்கடி எச்சில் துப்புவது நாவை உலரச் செய்யும். நாவை முறைப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உபாதைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: மகாலஷ்மி சுப்ரமணியன்