Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒப்பில்லாத ஓமம்!

நன்றி குங்குமம் தோழி

* ஓமத்தை சுத்தமான துணியில் முடிந்து மூக்கால் உறிஞ்சினால் மூச்சுத்திணறலும், தலைவலியும் நின்று விடும்.

* ஓமத்தை வறுத்துப் பொடித்து, தேனில் குழைத்து, உணவு ஜீரணமாகாமல், கக்கி வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி நின்று, ஜீரண சக்தி சீராகும்.

* ஓமத்தை துணியில் முடிந்து, வெந்நீரில் முக்கி, 3 ஸ்பூன் சாறு எடுத்து, தலைக்கு குளிப்பாட்டிய குழந்தைகளுக்கு குடிக்க தந்தால் சளி பிடிக்காது. வயிற்றுக்கும் நல்லது.

* வயிற்றுக் கடுப்பு சரியாக, ஓமத்தை மிளகுடன் சேர்த்து வறுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து, காலையிலும், மாலையிலும் உருட்டி சாப்பிட்டால் போதும்.

* ஓமம், சுக்குப்பொடி, வெல்லப் பொடியுடன் தேனில் கலந்து உருண்டைகளாக்கி, இனிப்பு, கார தின்பண்டங்கள் சாப்பிட்டதும் எடுத்துக் கொண்டால் மந்தநிலை ஏற்படாது.

* ஓமம், மிளகு, சுக்கு இவற்றை வறுத்துப் பொடித்து, வெந்நீரில் சிறிது கலந்து பருக, வயிறு மந்தம் சரியாகி ஜீரணமாகும்.

தொகுப்பு: எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.