Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதய அறுவைசிகிச்சை இப்போ ஈஸி!

நன்றி குங்குமம் டாக்டர்

இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!

இந்தியாவில், தீவிரமான இதய நோய் இருப்பது குறித்து கண்டறிவது அல்லது அதற்கான தேவை என்பது பெரும்பாலும் நாம் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே வந்துவிடுகிறது. இன்று நாற்பது மற்றும் ஐம்பது வயதுள்ள ஆண்களும் பெண்களும் நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இது பத்து ஆண்டுகளுக்குப் பிறகே கண்டறிப்படுகிறது. தேசிய அளவிலான தரவுகளின் படி இருதய நோய் மூலமான இறப்பு விகிதம் 100,000 பேரில் 282 பேருக்கு (The Lancet < https://www.thelancet.com/journals/lansea/article/PIIS2772-3682%2823%2900016-1/fulltext?utm_source=chatgpt.com >) என்றளவில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் இப்பிரச்னை எந்தளவிற்குப் பரவலாகவும், வழக்கமான காலத்திற்கு முன்பாகவே நேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ள பிரச்சினையாகவும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதய பிரச்னைகளுக்கான சிகிச்சை என்பது நீண்ட காலமாக அறுவை சிகிச்சையாகவே இருந்து வருகிறது. இன்னும் பலருக்கு இதுவே இன்னும் சிகிச்சையாக நீடிக்கிறது. ஆனால் இன்று அறுவை சிகிச்சையின் நிலை பெருமளவில் மாறிவிட்டது. முன்பெல்லாம், இதய அறுவை சிகிச்சை என்றால் மார்பில் பெரிய கீறல் போடப்படும். அறுவைசிகிச்சைக்குப் பின் நோயாளிகள் வாரக்கணக்கில் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவது வழக்கம்.

ஆனால் இன்று நோயாளிகளுக்கு சிறிய கீறல்கள் மூலம் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்படுகிறது. அடுத்து அவர்கள் வாரக்கணக்கில் மருத்துவமனையில் தங்கியிருக்க தேவையில்லை. குறுகிய காலம் தங்கினாலே போதுமானது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கேத்தீடர் என்றழைக்கப்படும் வடிகுழாய்கள் மூலம் மருத்துவ நடைமுறை முழுவதும் செய்து முடிக்கப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு சீக்கிரம் வேலைக்குப் போக முடியுமா அல்லது முடியாதா, என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள சீக்கிரமாக மீண்டு வருவேனா? மாட்டேனா போன்ற ஆழ்ந்த கவலைகளுடன் வாழ்பவர்களுக்கு, முந்தையை சூழல்களுடன் இப்போதைய சூழலை ஒப்பிட்டு பார்த்தால் இந்த வித்தியாசம் நன்கு புரியும்.

உதாரணத்துக்கு ஆர்டிக் ஸ்டெனோசிஸின் [aortic stenosis]-ஐ எடுத்துக் கொள்வோம். இது இதய வால்வை படிப்படியாகச் சுருங்க செய்து மூச்சுத் திணறலை உணர செய்கிறது.. திறந்த இதய அறுவைசிகிச்சை செய்வதற்கு மிகவும் பலவீனமாக இருக்கும் நோயாளிகளுக்கு, டிரான்ஸ்கேத்தர் ஆர்டிக் வால்வு மாற்று அறுவைசிகிச்சை (Transcatheter Aortic Valve Replacement (TAVR)) வாழ்வளிக்கும் சிகிச்சையாக இருந்து வருகிறது.

2020-ம் ஆண்டுவாக்கில், இந்தியாவில் சுமார் 30 மையங்கள் இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொண்டு வந்தன. இருப்பினும் பெரும்பாலான நோயாளிகள் ஒரு சில மருத்துவமனைகளில் (PMC < https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7044098/?utm_source=chatgpt.com >). மட்டுமே தங்களுக்கான சிகிச்சையைப் பெற ஆர்வம் காட்டிவருகிறார்கள். இந்த சிகிச்சையின் முடிவுகள் நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. இந்திய இதய நோய் மருத்துவர் குழுக்கள் இப்போது அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு வால்வு-இன்-வால்வு மருத்துவ நடைமுறைகளை [valve-in-valve procedures] மேற்கொண்டு வருகின்றன. இந்த சிகிச்சையின் மூலம் பலன் பெற்றிருக்கும் நோயாளிகள், முன்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதவர்களாக கருதப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நவீன சிகிச்சையின் மீது எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும், அதற்கான செலவு பற்றிய பேச்சு வரும்போது நோயாளியின் குடும்பத்தினரிடம் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் (Be Heart Healthy < https://behearthealthy.in/is-tavr-covered-by-insurance/?utm_source=chatgpt.com >)) இன்று ஒரு டிரான்ஸ்கேத்தர் ஆர்டிக் வால்வு மாற்று அறுவைசிகிச்சை (Transcatheter Aortic Valve Replacement (TAVR)) செய்ய ₹18-25 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.

இந்தத் தொகையானது, பெரும்பாலான வீடுகளின் வருமானத்திற்கு அப்பாற்பட்டது. ஆயுஷ்மான் பாரத்-பிஎம்- ஜேஏஒய் [Ayushman Bharat-PM-JAY] திட்டத்தின் கீழ் அரசு காப்பீடு ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரை வழங்குகிறது (NHA < https://nha.gov.in/img/pmjay-files/HBP-2.1.pdf?utm_source=chatgpt.com >). இது வழக்கமான அறுவை சிகிச்சைக்கான நிதி சுமையைக் குறைக்கிறது.

ஆனால் இத்தொகையானது, டிரான்ஸ்கேத்தர் ஆர்டிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை அல்லது லீட்லெஸ் பேஸ்மேக்கர்கள் போன்ற மிகவும் மேம்பட்ட அறுவைசிகிச்சைகளுக்கான செலவில் ஒரு சிறு பகுதியை மட்டுமே ஈடுகட்ட உதவுகிறது. காப்பீடு (PMC < https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC11250400/?utm_source=chatgpt.com >) இல்லாமல், ஒரு பேஸ்மேக்கர் பொருத்துவதற்கு சராசரியாக ₹1.7 லட்சம் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது பலருக்கு வழக்கமான டிவைஸ் தெரபியை கூட பெறுவதை கேள்விக்குறியாக்குகிறது.

சிகிச்சைகள் மற்றும் செலவுகள் இவற்றிற்கு இடையேயான இந்த இடைவெளிகள் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைகளின் தரவு அட்டவணைகளில் மிக அரிதாகவே பதிவு செய்யப்படுகின்றன. தங்களது நெருக்கமானவரைக் காப்பாற்றுவதற்காக குடும்பங்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்கின்றன அல்லது அதிக கடன் வாங்குகின்றன. மற்றொரு பக்கம், சிறிய நகரங்களைச் சேர்ந்த நோயாளிகள் பெரும்பாலும் மூன்றாம் நிலை மையங்களை தாமதமாக வந்தடைகிறார்கள்.

எங்கே செல்வது, எந்த மருத்துவரைப் பார்ப்பது, என்ன சிகிச்சை எடுப்பது என்பது குறித்த தகவல்களுக்கான தேடலில் பல மாதங்களைச் செலவிட்ட பின்னரே இவர்களால் அடுத்தது என்ன என்பது பற்றி யோசிக்கமுடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஊடுருவும் அறுவைசிகிச்சையின் நன்மை - குறைந்த அபாயம், மிக துரிதமாக மீண்டு வருவது போன்றவற்றின் பலன்களை பெற முடிவதில்லை. மிக தாமதமாக வருவதாலும், நிதி பற்றாக்குறையாலும் இவர்களுக்கு சிகிச்சைகளின் மூலமான பலன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் உண்மையானவை. அவை பல உயிர்களைக் காப்பாற்றுகின்றன. ஒரு காலத்தில் அதிக ஆபத்துள்ள திறந்த இதய அறுவைசிகிச்சை அல்லது எந்த சிகிச்சையும் இல்லை என்ற இரண்டு வாய்ப்புகளை மட்டுமே எதிர்கொண்ட நோயாளிகளுக்கு இப்போது பல வாய்ப்புகள் உள்ளன. பெரிய அறுவைசிகிச்சைகளை செய்து கொள்வதற்கு போதிய உடல் வலு இல்லாமல், மிகவும் பலவீனமான முதியவர்கள் டிரான்ஸ்கதீட்டர் மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தங்களது வீட்டுக்குச் செல்லமுடியும்.

குறைந்தபட்ச ஊடுருவும் முறையிலான வால்வு அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையை எடுத்துக்கொள்ளும், வேலைப் பார்க்கும் இளைய தலைமுறையினர் மாதக்கணக்கில் வீட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லாமல், ஒரு சில வாரங்களிலேயே தங்களது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பமானது, மிகச் சரியான தருணத்தில் பயன்படுத்தப்படும் போது, என்னவெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது என்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன.

ஆனால் உயிரைக் காப்பாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவில் இருக்கும் பெருநகரங்களுக்கு அப்பால் இருக்கும் சிறு நகரங்களிலும் கூட தனது பயிற்சி பெற்ற மையங்களின் தொகுப்பை பரவலாக விரிவுபடுத்த வேண்டும். மருத்து சிகிச்சைக்கான உபகரணங்களின் செலவுகளைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உண்மையான செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொது காப்பீட்டுத் தொகுப்புகளைப் புதுப்பிக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தி, அவை கிடைக்கும் வாய்ப்பு மற்றும் என்ன பலன்கள் என்பது குறித்த வெளிப்படையான தகவல்களுடன் ஒருங்கிணைக்கும்போது, சிகிச்சையின் தரத்தையும், பாதுகாப்பையும் சமரசம் செய்யாமல் மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவும். ஆரம்பகாலத்திலேயே நோயைக் கண்டறிதல் என்பது பிரச்னைக்கான சரியான சிகிச்சையை அளிப்பதற்கு சமமானது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் நோய் முற்றிப் போவதற்கு முன்பே அடையாளம் காணப்படுவதால், இந்த குறைந்தபட்சம் துளையிடும் சிகிச்சைகளின் மூலம் அவர்கள் பயனடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் குறைந்தபட்ச துளையிடும் இதய அறுவைசிகிச்சையானது, ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. இது புதுமையான சிகிச்சை என்ற நிலையிலிருந்து கட்டாய தேவை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்னவெறால், இது சமூகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சலுகை அல்ல,, தேவைப்படும் அனைவருக்குமான பராமரிப்பு தரமாக நிர்ணயிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதே.

அதற்கு அறுவை சிகிச்சை மீதான நிபுணத்துவம் இருந்தால் மட்டும் போதாது, கொள்கையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வை மற்றும் பொது முதலீடும் தேவைப்படும். அப்போதுதான் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சை, பெரும் பலன்களை, பெரும் எண்ணிக்கையில் கொடுக்கும் ஒன்றாக, நம் நாட்டின் இதய ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் வாக்குறுதியாக அமையும்.

தொகுப்பு: இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது