Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முந்திரி தரும் ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கிய பலன்கள் பலவற்றை கொண்டது முந்திரி. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும், நோய் தடுப்பு காரணியாகவும் இருக்கின்றன. அவற்றில் முந்திரியின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. முந்திரியும் மற்றும் முந்திரி இரண்டிலும் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. மேலும் இது சுவாசக் கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கக் கூடியது. முந்திரியில் நிறைந்துள்ள சத்துக்களானது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கின்றது.

முந்திரியில் (100 கிராம்) 553 கலோரிகள் இருக்கும். செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் உள்ளது. முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பாதுகாக்க முந்திரி உதவுகிறது. இது பல்வலியை சரி செய்வதோடு. காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது. முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

முந்திரிபருப்பு 4,5, சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுக்குள் வைக்கும். முந்திரியில் உள்ள தாதுப் பொருள், முடியின் கருமை நிறத்தை பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை தொடர்ந்து 1,2 சாப்பிட்டு வர கருமை நிறம் பெறும்.

டைப் 2 சர்க்கரைநோயை பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. முந்திரியை அளவாக சாப்பிடலாம். முந்திரியில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும் ரத்த நாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

வளரும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க, முந்திரியை கொடுத்து வரலாம். சரும பளபளப்பிற்கும் உதவுகிறது. ஞாபகத்தில் மேம்பட குழந்தைகளுக்கு முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை கொடுத்துவர அவர்களது செயல்திறன் அதிகரிக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்