Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முடக்கத்தான் கீரையின் மகத்துவம்

நன்றி குங்குமம் தோழி

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லை உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* முடக்கத்தான் கீரை துவர்ப்புச் சுவையுடையது. இதனை எண்ணெயில் வதக்கி, மிளகாயும், உப்பும் சேர்த்து துவையல் செய்து உணவில் சேர்த்துச் சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும்.

* முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியும்.

* சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும்.

* கீரையை சின்னதாக நறுக்கி அதனுடன் வெங்காயம் அதிகமாகச் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

* துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்து கூட்டு செய்யலாம்.

* கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கை கால் வலி, முதுகுவலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

* முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து, நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

* இக்கீரையின் சாற்றைக் காதில் விட்டால், காதுவலி குணமாகும்.

* கட்டிகளில் வைத்து கட்டினால், அவை உடைந்து புண் ஆறும்.

* பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

* தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

* முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணம். முடக்கத்தான் கீரையை அரைச்சு சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பற்று போட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* பொடுகுத் தொல்லை இருக்கறவங்க முடக்கத்தான் இலைகள் சேர்த்து செஞ்ச எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

இது வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகை கீரை என்பது குறிப்பிடத்தக்கது.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.