நன்றி குங்குமம் தோழி
* பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும்.
* வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
* தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்திருந்து பின் குளித்தால் பொடுகு நீங்கும்.
* ஒரு கப் ஆப்பிள் சாறுடன் ½ கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
* சின்ன வெங்காயத்தை உரித்து அரைத்து, தலையில் தடவி வைத்திருந்து குளித்து வர பொடுகு நீங்கும்.
* வெந்தயத்தை ஊறவைத்து, அத்துடன் நெல்லிக்காய் சேர்த்து அரைத்தெடுத்து, வாரம் இருமுறை தலையில் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும்.
* வால் மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.
* தேங்காய் எண்ணெயில் கற்பூரம் போட்டுக் காய்ச்சி ஆறியதும் தலையில் தேய்த்து வைத்திருந்து ½ மணி நேரத்திற்குப் பிறகு தலையை அலசி வந்தால் பொடுகு தொல்லை குணமாகும்.
* புதினா இலையை உலர்த்தி அம்மியில் பொடித்து பல் துலக்கினால் ஈறு பலம் பெறும்.
* இரண்டு கரண்டி கறிவேப்பிலை சாற்றில் ஒரு டம்ளர் மோர் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
தொகுப்பு: இரா.ரெங்கசாமி, தேனி.