Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயிற்றுப் புண்களை ஆற்றும் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் உட்கொள்ளும் உணவுகள் செரிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் திரவம் போன்ற அமிலங்கள் காலையில் அதிகமாக சுரக்கும். இந்நிலையில் காலை உணவை தவிர்த்தால் இந்த அமிலங்கள் செரிமானம் அடைவதற்கு உணவு இல்லாததால் வயிற்று பகுதிகளை அரிக்கத் தொடங்கும். இதனால் வயிற்றில் அல்சர் ஏற்பட்டு வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும். இது குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்.நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஆப்பிள், பேரிக்காய், ஓட்ஸ் போன்றவைகளை சாப்பிடும்போது அமிலத்தின் அளவை குறைத்து, வீக்கம், வலியை குறைக்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளதால் வயிற்றுப் புண்களை ஆற்றும் நல்ல மருந்தாகும். மணத்தக்காளி கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்து உள்ளதால் வயிற்றுக்கு குளிர்ச்சி அளித்து வயிற்றுப் புண்களை ஆற்றும் மலச்சிக்கல் பிரச்னையை போக்கும்.குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கு இருப்பதால் உணவில் சேர்ப்பதால் வயிற்றுப்புண் எளிதில் குணமாகும்.வாழைப் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் வயிற்றுப்புண்களை ஆற்றும். தயிர், நெல்லிக்காய் சாப்பிட வயிற்றுப் புண்களை எளிதில் குணமாக்கும்.

தினமும் பச்சைவாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட வயிற்றுப்புண் ஆறும்.அகத்திக்கீரையை சூப்பாக அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.வாழைப்பூ கூட்டு வயிற்றுப்புண்ணை ஆற்ற வல்லது.அம்மான் பச்சரிசியை சுண்டைக்காய் அளவு கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்புண் குணமாகும். பொடுதலை இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும். புளியம்பட்டை தூளை உப்பு சேர்த்து கசாயமாக குடிக்க வயிற்றுப்புண் குணமாகும்.

பலா இலைப்பொடி கால் தேக்கரண்டி, தேன் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்தில் சுக்குப்பொடி சேர்த்து ரெகுலராக சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நன்றாக ஆறும். கற்பூரவல்லி, வாழைக்காய் பொடியுடன் ஏலக்காய்ப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ, கூட்டாகவோ சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

பசலைக்கீரை, பருப்புக்கீரை வகைகளும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. உடலுக்கு குளிர்ச்சி தந்து, உடல் சூட்டை தணித்து சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியை கட்டுப்படுத்தும். காரம் குறைவான, மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காத, அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொள்ளாமல் இருத்தல் போன்றவை வயிற்றுப்புண் ஏற்படாமல் இருக்க உதவும்.

தொகுப்பு: எம்.வசந்தா