Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூப்பெய்துதல் சரியான வயதில் நிகழ…

நன்றி குங்குமம் டாக்டர்

இக்காலத்தில் சிறுமியர் பத்து, பதினொறு வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர். இதற்கு பரம்பரை ஒரு முழுக்காரணமாக சொல்லப்பட்டாலும், சிறுமியரின் அதிக உடல் எடை, ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்மை என பல காரணங்கள் உள்ளன. இதுவே, சில வீடுகளில் சிறுமியர் பதினாலு, பதினாறு வயதானாலும் பூப்பெய்தாமல் இருப்பர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, மனம் வருந்திக் கொண்டிருப்பர். இதைப் போக்க சில வழிமுறைகள்.

கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது படிகாரம் தூவி, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம். ஆலம் வேரை வாங்கி மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். இந்தப்பொடியை 200மிலி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்ட விடவும். இதை வடிகட்டி குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். முருங்கை இலை அல்லது கல்யாண முருங்கை இலையை அரைத்து 30மிலி அளவில் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதேபோல், மிதிபாகல் சாறையும் அருந்தலாம்.

பப்பாளி காயை கூட்டு செய்து சாப்பிட்டு வரவும்.முள்ளங்கியோடு 5 கிராம் இஞ்சியை சேர்த்து அரைத்து சாறாக்கி மோரில் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

1 டீஸ்பூன் மஞ்சள்தூளுடன் சிறிதளவு பனைவெல்லம் அல்லது தேனும், தே.பாலும் கலந்து சாப்பிடலாம். கறுப்பு உளுந்து, கறுப்பு எள், முருங்கைக்கீரை, ஆளிவிதை, எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் இவற்றை ஏதாவது ஒரு வழியில் எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

கறுப்புத் திராட்சையை தோல், விதையோடு சேர்த்து அரைத்து பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை தொடர்ச்சியாக அருந்தலாம். தனியா, சோம்பு இவற்றை கரகரப்பாக பொடித்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் டீ மாதிரி அருந்தலாம். பேரீச்சம் பழத்தை தினசரி இரவு இரண்டு சுளைகள் சாப்பிட்டு வரலாம்.ஆலிவ் எண்ணெய் சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு உடலில் சூட்டைக் குறைத்து ஆரோக்கியமான உடல் வெப்பத்தைப் பராமரிக்கிறது. மேலும், இதில் உள்ள ஒலியிக் சத்து கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.

தொகுப்பு: மகாலக்‌ஷ்மி சுப்ரமணியன்