நன்றி குங்குமம் தோழி
உலர்ந்த அத்திப்பழம் நாட்டு மருந்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் பல மருத்துவ
குணங்களையும் கொண்டது.
*இரவில் மூன்று முதல் ஐந்து அத்திப் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ேசாகை பிரச்னைகள் சரியாகும். புதிய ரத்தமும் உற்பத்தியாகும்.
*உடலில் அதிக பித்தம் உள்ளவர்கள் தினமும் இரண்டு, மூன்று அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் வியர்வை வழியாக வெளியாகி விடும். பித்த உபாதைகள் நீங்கி விடும்.
*இரவில் தண்ணீரில் ஊறவைத்த இரண்டு அத்திப் பழங்களை சாப்பிட்டு வந்தால் தலை முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*இந்தப் பழத்தில் அதிக நார்ச் சத்து இருப்பதால் உடம்பில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.
*எடை அதிகம் உள்ளவர்கள் எடையை குறைக்க தினமும் இதை சாப்பிட்டு வரலாம்.அத்திப்பழம் சாப்பிடுவோம், நன்மைகள் பெற்று நலமுடன் வாழ்வோம்.
தொகுப்பு: எஸ்.உஷாராணி, கோவை.
