Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

துருவ் விக்ரம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கியவர் துருவ் விக்ரம். இவர், நடிகர் விக்ரமின் மகனாவார். அதைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் வர்மா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படத்தின் நாயகனும் இவரே. சமீபத்திய தமிழ் சினிமாவின் இளம் முன்னணி கதாநாயகர்களில் துருவ் விக்ரமும் குறிப்பிடத்தக்கவர். துருவ்வின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: பிட்னெஸ் என்பது நமது வெளித் தோற்றத்தை தாண்டி, நமது மைண்டுக்கு நல்லது. நமது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. நமது தூக்கத்திற்கு நல்லது. நான் ஃபிட்னெஸை எப்படி பார்க்கிறேன்னா, ஒரு நல்ல ஸ்டேஜுக்கு வந்தபிறகு அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றபடி தினசரி பயிற்சிகள் கட்டாயம் உண்டு. நான் சில நேரம் சோம்பேறித்தனமா உடற்பயிற்சி செய்வதை விட்டால் கூட அப்பா விடமாட்டார். கட்டாயப்படுத்தி உடற்பயிற்சிகள் செய்ய வைத்துவிடுவார். அவருக்கு எப்பவும் ஃபிட்டா இருக்கணும்.

ஹெல்த்தியா இருக்கணும். ஆரோக்கியமானதை சாப்பிடணும், சரியான நேரத்துக்கு தூங்கணும். அப்போதான் ஃபிட்டா இருக்க முடியும்னு சொல்லிட்டே இருப்பாரு. எனவே, தினசரி வொர்க்கவுட்ஸ் கட்டாயம் இருக்கும். அந்த வகையில், தினசரி கார்டியோ பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, சைக்ளிங், ஓட்டப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வேன். அதைத் தவிர்த்து புல் - அப்ஸ், புஷ் - அப்ஸ் மற்றும் கால்களை வலுவூட்டும் சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இதுதவிர, சைக்கிளிங், நடைப்பயிற்சியும் உண்டு. அதன்பிறகு, எனது டிரைனர்கள் சொல்லும் பயிற்சிகளையும், டயட்களையும் பின்பற்றுவேன்.

டயட்: உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு டயட்டிலும் கவனமாக இருக்க வேண்டும் என அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். பொதுவாக எனது உணவில் முட்டை, காய்கறிகள், ப்ரோட்டீன் ஷேக்ஸ், மீன் உணவுகள் போன்றவை தினசரி இருக்கும். இது தவிர, அப்பா அவ்வப்போது சில டயட்களை ஃபாலோ செய்வார். அவரோடு சேர்ந்து, நானும் சில டயட்களை பின்பற்றுவேன். உதாரணமாக ப்ரோட்டீன் டயட், லோ கார்ப் டயட் போன்றவற்றையும் மேற்கொள்வேன். ப்ரோட்டீன் டயட் என்பது முட்டை, சிக்கன், நட்ஸ் வகைகள் மட்டுமே கொண்ட பிரத்யேக டயட்டாகும். இதில் வேறு எந்த சேர்க்கையும் இருக்காது.

லோ கார்ப் டயட் (Low Carb Diet) இது கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும். இதனால், உடலில் 80 முதல் 240 கலோரிகள் வரை மட்டுமே சேரும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பலரும் இந்த டயட்டை பின்பற்றுகின்றனர். அதேசமயம் எனக்கு ஐஸ்கிரீம், டெஸர்ட் போன்றவை மிகவும் பிடிக்கும். ஐஸ்கிரீம், டெஸர்ட் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றிவிட்டால், யாருக்கும் தெரியாமல், குறிப்பாக அப்பாவுக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டு சாப்பிடுவேன்.

டயட்டை பொருத்தவரை மிக முக்கியமாக கடைபிடிப்பது வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஏனென்றால், வெள்ளை சர்க்கரையை தவிர்த்தால் அது மைண்ட்க்கு மிகவும் நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் சர்க்கரை முற்றிலுமாக தவிர்த்துவிடுவேன். இவ்வளவுதான் எனது டயட் பிளான் எல்லாம். என்னைப் பொருத்தவரை சிம்பிள் ஃபிட்னெஸ் என்பது ஆரோக்கியமா சாப்பிடணும். போதுமான அளவு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

தொகுப்பு: தவநிதி