Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தினசரி நடைப்பயிற்சி நலமே!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் தினசரி நடக்கும் தூரம் குறைந்துவிட்டதால்தான் வியாதிகள் அதிகரித்து விட்டது. எனவே, காலை வேளையில் எழுந்தவுடன் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பல நன்மைகளை தரும். அவற்றை தெரிந்து கொள்வோம்.தினசரி நடப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம். மாரடைப்புக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. நடைப்பயிற்சி இதயத் துடிப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுவாசத்தையும் மேம்படுத்துகிறது.

பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் அவதிப்படுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து ஓரளவுக்கு விடுபட முடியும்.தினசரி நடைப்பயிற்சி உடல் தசைகளை வலுவாக்கும். உடலை சமநிலைப்படுத்துகிறது. உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. தசைகளை ஆரோக்கியமாக்குகிறது. உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி ஒரு நல்ல வழி என்று சொல்லலாம். நடைப்பயிற்சி கலோரிகளை எரிக்கிறது. இதனால் எடை எளிதில் குறையும். காலையில் நடைப்பயிற்சி செய்வதால் பசியையும் கட்டுப்படுத்தலாம். நடைப்பயிற்சி உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வழக்கமான நடைப்பயிற்சி உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. கொழுப்பு சேர்வதே இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்க்குக் காரணம். நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மனச்சோர்வை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. காலையில் வெயிலில் நடப்பது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது. சூரிய ஒளியின் மூலம் உடலில் வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.

அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்றநேரம். இந்த நேரத்தில் சுற்றுசூழலில் மாசு குறைவாக இருக்கும். நடைப்பயிற்சி செய்யும்போது மென்மையான ஷூ பயன்படுத்தலாம். காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் சுவாச மண்டலம். இதய நாள மண்டலம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். நுரையீரலின் சுவாசத்திறன் அதிகரிக்கும். அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய் கட்டுப்படும். தூய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில், பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆரோக்கியமானது.

தினமும் குறைந்தது 30 நிமிடம் அதிகபட்சம் மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் 3 லிருந்து 5 கி.மீட்டர் நடக்க வேண்டும். தினமும் நடக்க இயலாதவர்கள் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடம் நடந்தாலும் நன்மைதான். சாப்பிட்டதும் குறுநடை செய்வது நலம். நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்க சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி, நெஞ்சு அடைப்பு, இதயபடபடப்பு, வழக்கத்திற்கு மாறாக அதிக வியர்வை தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம். நெஞ்சுவலி, முழங்கால் வலி, குதிகால்வலி போன்ற பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் நடக்கவும்.

தொகுப்பு: பொ. பாலாஜி கணேஷ்