Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கறிவேப்பிலையின் மகத்துவம்

நன்றி குங்குமம் தோழி

நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக்கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. ேமலும் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது.

*கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இதனால் ரத்த சோகை பிரச்னை நீங்குகிறது.

* பெண்களின் கருப்பையில் சேரும் வெப்பத்தைக் குறைக்கின்றது.

* கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

* கூந்தலை வளரச் செய்யும். நரையைக் கட்டுப்படுத்தும்.

* கொழுந்து கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* கறிவேப்பிலையில் சுண்ணாம்புச் சத்து. இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கந்தகச் சத்து, புரதச்சத்து, மக்னீசியம், உயிர்ச் சத்து, குளோரின் சத்து ஆகியவைகள் அடங்கி இருப்பதால், இதனை கொத்தமல்லியுடன் சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம்.

* தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

* கறிவேப்பிலையை கொத்தமல்லியுடன் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலக்கி வெறும் வயிற்றில் குடித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கும்.

* மஞ்சள், கரிசலாங்கண்ணி கீரைப் பொடி, கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து தண்ணீரில் கலக்கி குடித்தால் காச நோய் நீங்கும்.

* இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.

- இரா.ரெங்கசாமி, தேனி.