Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருங்குருவை அரிசி

நன்றி குங்குமம் தோழி

பாரம்பரிய அரிசிகளில் மருத்துவ குணம் அதிகம் உடைய அரிசி கருங்குருவை. இது ஒரு அரிய வகை அரிசி என்றாலும், நம் முன்னோர்களால் மாமருந்தாக கருதப்பட்ட இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்.

*கருங்குருவை அரிசி சிவப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பு அரிசி வகையை சேர்ந்தது. இது பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

*120 - 125 நாட்களில் அறுவடை செய்யப்படும் இந்த கருங்குருவை அரிசி இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. வருடத்தில் டிசம்பர் - ஜனவரி மற்றும் ஜூன் - ஜூலை ஆகிய மாதங்களில் கருங்குருவை பயிரிடப்படுகிறது.

*கருங்குருவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப் போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது. இதன் நெல் தானிய மணிகள் கருப்பாகவும் அரிசி சிவப்பாகவும் காணப்படும்.

*இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ, புரதச்சத்து என இவை அனைத்தும் நிறைந்துள்ளது.

*சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த அரிசியை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுகிறது.

*வயதில் சிறியவர்களாக இருப்பார்கள்.ஆனால் பார்ப்பதற்கு மிகவும் வயதில் பெரியவர்கள் போல் அவர்களின் தோற்றம் பிரதிபலிக்கும். இதை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கருங்குருவை அரிசி. இதனை உணவில் எடுத்துக் கொள்ளும்போது வயதான தோற்றத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

*கருங்குருவை அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க உதவுகிறது.

*மலச்சிக்கலை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

*உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கும்.

*பித்தம் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யும்.

*கூந்தல் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

*கருங்குருவை அரிசியில் இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, இடியாப்பம் மற்றும் கஞ்சி போன்ற அனைத்து வகை உணவுகளை தயார் செய்யலாம். கருங்குருவை அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொண்டு பல நோய்களில் இருந்தும் விடுபடலாம்

- ஏ.ஏஸ்.கோவிந்தராஜன், சென்னை.