Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூர்ய நமஸ்காரம் பெண்கள் செய்வதால் ஏற்படும் பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

எல்லா வயதினரும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆண்கள் செய்ய முடிவது போல் வேலைச்சுமை காரணமாக பெண்கள் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. இளம் வயது முதலே சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பிப்பதால் பலவித நன்மைகள் உண்டாகும். அவசரமாக செய்யாமல் நிதானமாக, தொடர்ச்சியாக செய்யப்படும் பன்னிரண்டு யோகாசனங்கள்தான் சூர்ய நமஸ்காரம்.

12 விதங்களை உள்ளடக்கிய சூர்ய நமஸ்காரம் செய்வதால் பல உடல் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு சூர்ய நமஸ்காரத்தை சரியான முறையில் செய்ய வேண்டும்.

சூர்ய நமஸ்காரத்தை சரியாக செய்ய நான்கு நிமிடங்கள் வரை ஆகும். நமஸ்காரம் செய்யும்போது சுவாசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை ஆறுமுறை ஒருநாள் செய்தால் போதுமானது. அதிகமுறை செய்வதை தவிர்க்க வேண்டும்.

தினமும் சூர்ய நமஸ்காரம் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் மற்றும் சருமத்தின் பொலிவு கூடும். இதனை தொடர்ந்து செய்து வர சுருக்கங்கள் மற்றும் ஆரம்பகால வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம். வயது கூடினாலும் இளமையாக இருக்க வேண்டுமானால் தினமும் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

மன ஆரோக்கியம் மேம்பட சூர்ய நமஸ்காரத்தை தினமும் செய்யலாம், ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட, ரத்த ஓட்டம் மேம்பட சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

இதில் உள்ள சில தோரணைகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. தொடர்ந்து செய்வதன்மூலம் வாயு, மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.

சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் மற்றும் நினைவாற்றல் மேம்படும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்வதில், வயிற்று தசைகளை பலப்படுத்த என சூர்ய நமஸ்காரம் நல்ல தீர்வைத் தரும்.

சூர்ய நமஸ்காரம் செய்வதால் கண்ணொளி மேம்படும்.

சூர்ய நமஸ்காரத்தை சரியான முறையில் செய்து அனைத்துப் பலன்களையும் பெறலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்