Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரிக்காய் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளது. இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து வாத நோய்களை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்தது. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரக செயல்பாட்டை சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் கரைக்கு தன்மை இதற்கு உண்டு.

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்னை சரியாகும்.

பேரிக்காய்க்கு உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீர் உள்ளது. அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை உள்ளடக்கியது. எனவே எடை இழப்பிற்கு மட்டுமின்றி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

அனைத்து ஊட்டச்சத்துக்களும் தினமும் நமக்கு குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகிறது. அந்தவகையில், ஒரு நடுத்தர பேரிக்காயானது ஆறு கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளதாகவும், பெண்களின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.