நன்றி குங்குமம் டாக்டர்
சீரகத் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், உடல் எடை குறையும், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும், ரத்த சர்க்கரை அளவு சீராகும், ரத்த சோகை நீங்கும், இதய ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சரும ஆரோக்கியம் மேம்படும் மற்றும் தூக்கமின்மை பிரச்னை குறையும்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: சீரகத் தண்ணீர் செரிமான மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது, இதன் மூலம் அஜீரணம், வயிற்று வலி, வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளைக் குறைக்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது: சீரகத் தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, மேலும் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைக்கவும், குறிப்பாக தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது: ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது: சீரகம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு சேமிப்பைக் குறைக்கிறது.
உடல் நச்சு நீக்கம் மற்றும் இரும்புச்சத்து: சீரகத் தண்ணீர் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை சுத்தப்படுத்தி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
ரத்தசோகை நீங்கும் சீரகம் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும், இது ரத்த சோகை பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்லது. மற்ற நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தி: சீரக நீர் நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம் சீரகத்தின் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் சருமப் பிரச்சனைகளைப் போக்க உதவுகின்றன. சீரகப் பொடியை தேனுடன் சேர்த்து சருமத்தில் தடவலாம். தூக்கமின்மைக்கு சீரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
எப்படி குடிப்பது?
ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர், காலை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க, உணவுக்கு முன் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
தொகுப்பு: தவநிதி
