Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முந்திரிப்பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

முந்திரிப் பழத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. முந்திரிப் பருப்பை போலவே முந்திரி பழத்திலும் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. ஆனால் இதனை முந்திரியைப் போல் சாப்பிட முடியாது. அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி நிறைந்துள்ளதுஉடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக, ஆரஞ்சுப் பழத்தில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்துள்ளது என்று நினைப்போம். ஆனால், ஆரஞ்சுப் பழத்தை விட 5 மடங்கு வைட்டமின் சி சத்து ஒரு முந்திரிப் பழத்தில் அடங்கியுள்ளது.

எலும்பு பலமாக இருக்கஎலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும். எலும்புகள் பலமாக இருக்க கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் முழுவதும் முந்திரிப் பழத்தில் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் வயிறு வலி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

அதுபோன்று, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், முந்திரிப் பழம் எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள சார்பிட்டால் என்ற வேதிப்பொருள் உடலில் சென்றடைகிறது. இது பெருங்குடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை வழங்கி கழிவுகளை சுலபமாக அகற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை விரைவில் குணமடைகிறது.

தோல் பிரச்னை சரியாகசருமப் பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய ஆற்றல் முந்திரிப் பழத்திற்கு உண்டு. பொதுவாக, சருமப் பிரச்னைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடைகளில் விற்கக்கூடிய செயற்கை க்ரீம்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் சில பின்விளைவுகள் ஏற்படுகிறது. முந்திரிப் பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடபன்டுகள் நிறைந்துள்ளதால் தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம், மற்றும் வெடிப்பு போன்றவற்றை நீக்குகிறது. குறிப்பாக அழகு சாதனப் பொருட்கள்

தயாரிக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.

முந்திரி பழம் சாப்பிடும் முறை

முந்திரி பழம், நீர்த்தன்மையுள்ள பழமாகும். இதனை மற்ற பழங்களைப்போல் மென்று தின்ன முடியாது. ஏனென்றால், இதில் அதிகளவு சாறுதான் இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீ