Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண்களின் உடல் கோளாறுகளை நீக்கும் அருமருந்து!

நன்றி குங்குமம் தோழி

பிரண்டை என்ற அற்புத மூலிகை பல உடல் கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உபாதைகளின் அருமருந்து.

*பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வெறும் வயிற்றில் பிரண்டைச் சாறு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டால் மாதவிடாய் சீராகும்.

*பிரண்டையை துவையலாக அரைத்து உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

*உடம்பில் அரிப்பு பிரச்னை இருந்தால் பிரண்டையை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

*மூட்டுவலி உள்ளவர்கள், பிரண்டையை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி, அந்த எண்ணெயை வடிகட்டி தேய்த்து வந்தால் வலி குணமாவதுடன் எலும்பு மற்றும் மூட்டு எலும்புகளுக்கு வலிமை தரும்.

*அடி வயிற்றுப்பகுதியில் சதை அதிகமாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் சதை களைந்து விடும்.

*பிரண்டையை காயவைத்து, நெருப்பில் எரித்து சாம்பலாக்கி, ஒரு பங்கு சாம்பலில் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி பத்து நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். நீர் வற்றி உப்பு மட்டும் தங்கி இருக்கும். அதில் இரண்டு கிராம் அளவினை பாலில் கலந்து சாப்பிட ஊளைச் சதை குறையும்.இப்படி பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படும் பிரண்டையை உணவில் சேர்த்து நோய்களிலிருந்து விடுபடுவோம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.