தேவையானவை:
நெல்லிக்காய் - 4
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய், துவரம்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கிவிட்டு, வேகவைத்ததை மசிக்கவும். மிக்ஸியில் சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த நெல்லி - பருப்பு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து