Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 வயது சிறுமியை 3 வருடமாக பலாத்காரம் செய்த முதியவருக்கு 110 வருடம் சிறை

4 வயது சிறுமியை 3 வருடமாக பலாத்காரம் செய்த முதியவருக்கு 110 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரமணன் (62). பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது சிறுமி அடிக்கடி டிவி பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தநிலையில் ஒரு நாள் ரமணன் பலாத்காரம் செய்வதை சிறுமியின் பாட்டி பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இது தொடர்பாக போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ரமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த சேர்த்தலா போக்சோ நீதிமன்றம் ரமணனுக்கு 110 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.