Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சதுர்த்தி நெருங்குவதையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: நாடு முழுவதும் வருகிற 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும்,பொதுமக்கள் சார்பிலும் பிரதிஷ்டை செய்வதற்காக சிலைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.சிலர் வெளியூர்களில் விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்,சுண்ணாம்பு அல்லது மரவள்ளி கிழங்கு மாவால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கரைக்க வேண்டும்.பிளாஸ்ட் ஆப் பாரீஸ் டிஸ்டம்பர், பிளாஸ்டிக், பெயின்ட் ,வார்னீஸ் உள்ளிட்ட ரசாயனக் கலவைகள் கொண்டு சிலைகள் செய்யக் கூடாது என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் சில இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக உள்ளது. தற்போது, உடுமலை ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பல வடிவங்களில் மரவள்ளி கிழங்கு மாவால் ஆன சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.சுமார் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாராக உள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்காக வருவாய்துறை, போலீஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெவ்வேறு கட்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், தண்ணீரில் கரையும் வகையிலான சிலைகளாக மட்டுமே இருக்க வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரீஸ் போன்ற ரசாயன கலவை மூலம் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி கிடையாது.இதுகுறித்து சிலை பிரதிஷ்டை செய்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி,ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், ரசாயன கலவை கொண்டு செய்யப்படுகிறதாக என்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.அதைமீறி செயல்பட்டால் சிலைகள் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.