தேவையான பொருட்கள்
2திருக்கை மீன்
1வெங்காயம்
1தக்காளி
கறிவேப்பிலை - சிறிதளவு
10 பல்பூண்டு
குழம்பு தூள் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
1 ஸ்பூன்வெந்தயம்
உப்பு - தேவையான அளவு
அரைக்க
10 பல்பூண்டு
2 ஸ்பூன்சீரகம்
2 ஸ்பூன்மிளகு
செய்முறை:
திருக்கை மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.பின்பு இடி உரல் அல்லது அம்மியில் பூண்டு மிளகு சீரகம் சேர்க்கவும்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும். பின்பு தேவையான பொருட்களான வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும்.வெந்தயம் நன்றாக சிவந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் பிறகு கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து கிளறவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இடித்து வைத்த மசாலா பொருட்களை சேர்க்கவும். அதனுடன் காரத்திற்கு ஏற்ற குழம்பு தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்த தண்ணீரை ஊற்றவும். பிறகு தட்டு போட்டு மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிப்பதற்கு எண்ணெய் வடகம் சேர்த்து தாளிக்கவும்.சட்டியில் வைத்த சுவையான திருக்கை மீன் குழம்பு தயார்.
