சத்தியமங்கலம், டிச. 13: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் பவானிசாகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி (விதைகள்) திட்டத்தின் ஒரு அங்கமான தென் மண்டல கண்காணிப்பு குழு பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தரமான விதை உற்பத்தி வழிமுறைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டது. தார்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் தேசிய விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தீபன்ஷு ஜெய்ஸ்வால், மற்றும் குழுவினர் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விதை உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர்.
விதை உற்பத்தி அலுவலர் விக்னேஸ்வரி, உதவி விதை உற்பத்தி அலுவலர் உத்தராசு ஆகியோர் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விதை உற்பத்தி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை மையத்தின் சார்பில் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர் உமாராணி, பேராசிரியர் குமரேசன் (பயிர் மரபியல் மற்றும் இன விருத்தியில்), இணை பேராசிரியர்கள் வனிதா (விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), ஆனந்தன் (தாவர நோயியல்), மற்றும் பிரீத்தா, (பூச்சியியல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் மலர்கொடி (விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), சத்தியசீலன் இணை பேராசிரியர் (பூச்சியல்), முனைவர். க.இரமா, இணை பேராசிரியர், (உழவியல்) மற்றும் சிவசக்திவேலன், உதவி பேராசிரியர் (வேளாண் நுண்ணுயிரியல்) ஆகியோர் செய்திருந்தனர்.


