ஈரோடு, டிச.8: ஈரோடு ஸ்டோனி பாலம் மற்றும் கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகளில் கடல் மீன்கள் மற்றும் அணை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தைவிட நேற்று மீன்கள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்கள் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்தது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.800க்கு விற்ற வஞ்சிரம் நேற்று ரூ.100 அதிகரித்து ரூ.900க்கு விற்பனையானது.
எனினும் மீன்கள் விற்பனை மும்முரமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு: தேங்காய் பாறை- ரூ.550, மஞ்சள் பாறை- ரூ.500, ஊளி (பெரியது)- ரூ.550, ஊளி (சிறியது)- ரூ.350, கேரளா மத்தி- ரூ.250, கிழங்கா- ரூ.200, கட்டா பாறை- ரூ.550, அயலை- ரூ.250, நண்டு- ரூ.550, இறால்- ரூ.500.


