சத்தியமங்கலம், டிச. 5: ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார் (36). இவர், தாளவாடி ஓசூர் சாலையில் ஜவுளிக்கடை, ஹார்டுவேர் கடை மற்றும் தங்க நகைகள் அடமானத்திற்கு பணம் கொடுக்கும் பவுன் புரோக்கிங் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கிஷோர்குமார் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது உறவினருடன் செல்போனில் பேசியபடி தாளவாடி பஸ் நிலையத்தில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது போனில் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதாகவும் அப்போது உறவினருடன் பேசிய செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
+
Advertisement

