Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் - 58, எழும்பூர், வென்னல்ஸ் சாலையில் தற்போது இயங்கி வந்தது. இந்த அலுவலகம் இன்று முதல் வேப்பேரி, ஈ.வி.கே சம்பத் சாலை, எண்.75ஏ என்ற முகவரியில் செயல்படும். எனவே, பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிக்கவும் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்தவும் இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துணை பகுதிப் பொறியாளரை 8144930214 என்ற எண்ணிலும், உதவிப் பொறியாளரை 8144930058 என்ற எண்ணிலும், பணிமனை மேலாளரை 7824890058 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.