Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் இந்து அறநிலையதுறை இணை ஆணையர் மண்டலத்தில் மண்டல ஹெரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு

வேலூர், ஜூலை 23: வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் 29 புராதன, தொன்மை சிறப்புமிக்க திருக்கோயில்களை புனரமைப்பதற்காக மண்டல அளவிலான ஹெரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 280 திருக்கோயில்கள், மடங்கள், சமண கோயில்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 4 ஆண்டுகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3 ஆயிரத்து 118 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் வேலூர் இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 114 திருக்கோயில்கள் அடங்கும். அதேபோல், தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் பொருட்டு புனரமைப்புப்பணிக்கான மதிப்பீட்டை பரிசீலித்தல் மற்றும் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்ய மாநில மற்றும் மண்டல அளவில் ஹெரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மண்டல அளவிலான கமிட்டி இணை ஆணையர் அனிதா தலைமையில், மாமல்லபுரம் அரசு சிற்பக்கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் ராஜேந்திரன், மாநில தொல்லியல் அலுவலர் ரஞ்சித், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், மண்டல ஸ்தபதி மார்கபந்து, சோளிங்கர் நரசிம்மசுவாமி கோயில் ஓய்வு பெற்ற பட்டாச்சாரியார் தரன், வெட்டுவாணம் ஓய்வு பெற்ற குருக்கள் சந்திரசேகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

வேலூர் மண்டல அளவிலான இந்த கமிட்டி ஆய்வுக்கூட்டம் வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இதில் வேலூர் கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் கோயில், வேலூர் சலவன்பேட்டை ஜெயசக்தி விநாயகர் கோயில், படவேட்டம்மன் கோயில், காட்பாடி தாராபடவேடு கோட்டை மாரியம்மன் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில், வடவிரிஞ்சிபுரம் கண்ணூரம்மன் கோயில், லத்தேரி ராமநாதீஸ்வரர் கோயில், காளாம்பட்டு சித்தி விநாயகர் கோயில், மேல்விலாச்சூர் பூவாளாத்தம்மன் கோயில், கார்ணாம்பட்டு கைலாசநாதர் கோயில், திருப்பத்தூர் வெங்களாபுரம் வெங்கடரமணபெருமாள் கோயில், திருவள்ளூர் மாவட்டம் எலியம்பேடு திருமுல்லீஸ்வரர் கோயில், குமரக்கன்பேட்டை மிதந்தீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோயில்,

மணவூர் நந்தீஸ்வரர் கோயில், பெரிய களக்காட்டூர் கிராமதேவதை பொன்னியம்மன் கோயில், காரணியாம்பட்டு ராமலிங்கேஸ்வரர் கோயில், புங்கத்தூர் அகத்தீஸ்வரர் கோயில், மேலானூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், மேப்பூர் பஜனை கோயில், பருத்திப்பட்டு வேணுகோபாலசுவாமி கோயில், வரதராஜபுரம் சித்திபுத்தி விநாயகர் கோயில், பாரிவாக்கம் பாலீஸ்வரர் கோயில், செட்டிக்குளக்கரை ஆஞ்சநேயசுவாமி கோயில், திருமுல்லைவாயில் எட்டியம்மன் கோயில், திருப்பத்தூர் குரிசிலாப்பட்டு தருமராஜர், திரவுபதியம்மன் கோயில், ராணிப்பேட்டை பள்ளூர் வராஹியம்மன் கோயில் என 29 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திருப்பணிகளுக்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.