ஸ்ரீ வில்லிபுத்தூர், ஜூலை 9: தனியார் மில்லில் வேலை பார்த்தவர் 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன்(35). இவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement