Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

அரியலூர், ஜூன் 28: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்மவிருது வழங்கிட அறிவித்துள்ளது. இது குறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் (பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் அகியவற்றிற்கு வித்யாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள்< https://awards.gov.in/ > மற்றும் < https://padmaawards.gov.in/ > என்ற இணையதள முகவரியில் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்) மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் அவர்களை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.