Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் விநாயகர், சுப்பிரமணியர் தேருக்கு சட்டம் அமைக்கும் பணி துவங்கியது

நெல்லை, ஜூன் 27: நெல்லையப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவுக்கு சுப்பிரமணியர் தேருக்கு சட்டங்கள் அமைக்கும் பணி நடந்தது.

நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்கள் தயார்படுத்தும் பணிநடந்து வருகிறது. இதில் சுவாமி தேருக்கு 7 அடுக்கு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. அம்பாள் தேருக்கு 5 அடுக்கு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து புதிய வடக்கயிறுகள் பொருத்தப்பட்டு அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட இரு தேர்களிலும் சாரங்கள் அமைத்து 3 அடுக்குகள் கொண்ட சட்டங்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேருக்கு சட்டங்கள் பொருத்தும் பணி துவங்கும். இதன்பின்னர் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு பிரம்மா, யாழிகள், குதிரைகள் பொருத்தப்பட்டு அலங்கார பதாகைகள் கட்டப்படும். தேரோட்டத்துக்கு முதல்நாள் ஜூலை 7ம் தேதி 5 தேர்களுக்கும் மாவிலை, வாழைமர தோரணம் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார்படுத்தப்படும்.