Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாசலில் ஏற்றிய விளக்கால் விபரீதம் நைட்டியில் தீப்பிடித்து பெண் படுகாயம்

அண்ணாநகர், ஜூன் 25: திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுலோசனா (50). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைத்துள்ளார். அப்போது அவற்றை கவனிக்காத அவரது மகள் ஸ்ரீதேவி (24), வாசலில் நின்றிருந்தபோது நைட்டியில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. மகளின் கூச்சலை ேகட்ட தாய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்தபோது மகளின் நைட்டியில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நீண்ட நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

பின்னர் அவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஸ்ரீதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஸ்ரீதேவி சிறுவயது முதல் சற்று மனநல பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக நைட்டியில் தீப்பிடித்தது தெரியாமல் நின்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.