ஜெயங்கொண்டம், ஜூலை 9: அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பதாக கூறி, வீடுகளை இயந்திரங்கள் கொண்டு இடிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மருதூர் கிராமத்தில் நீர்நிலைப் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்ததை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருதூர் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தனபாக்கியம் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
+
Advertisement