திருச்செங்கோடு, ஜூலை 23: எலச்சிப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்று, நல உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தொடங்கி வைத்தார். எலச்சிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்று, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
அதன் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல், பிடிஓ.க்கள் லோகமணிகண்டன், பிரகாஷ், உதவித் திட்ட அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.