விருதுநகர், அக்.31:விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வெளியிட்ட தகவல்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற நவ.3 காலை 10 மணியளவில் முன்னாள், இந்நாள் ராணுவத்தினர் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரு பிரதிகளில் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
+
Advertisement 
 
  
  
  
   
