ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.30: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கொளுத்தும் வெயில், தொடர்ச்சியான மலையின்மை ஆகியவற்றின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவி வறண்டு போய் இருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இந்த அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் விழும் தண்ணீர் அந்தப் பகுதியில் உள்ள நீர் ஓடைகள் வழியாக வருவதால் செண்பகத்தோப்பு பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
