சாத்தூர், செப்.30: சாத்தூர் ரயில் நிலையத்திற்கு இரவு சென்னை, பெங்களூர், மதுரை, குருவாயூர், திருநெல்வேலி பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் பயணிக்க ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். தற்போது ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகளை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முதல் நடைமேடையில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.
அந்த கழிப்பறையும் பூட்டி கிடப்பதால் பயணிகள் இருளில் அச்சத்துடன் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் கழிப்பறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். பயணிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் கழிவறை பூட்டி கிடப்பதால் திறந்த வெளியில் இருட்டுக்குள் செல்ல வேண்டியுள்ளது. எனவே கழிவறைகளை திறக்க வேண்டும் என்றனர்.