சாத்தூர், ஆக.30: உப்புத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர். இதில் மனு அளித்தவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. சாத்தூர் அருகே உப்புத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சமூக நல தனி வட்டாட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. முகாமில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணப்பிரியா, சிவக்குமார், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
சிறப்பு முகாமில் மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலாகடற்கரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மனு அளித்தவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.