சிவகாசி, செப். 27: சிவகாசி அருகே வலிப்பு நோய் பாதித்து வாலிபர் உயிரிழந்தார். சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி அண்ணா காலனியை சேர்ந்தவர் கணேசன் (36). குடிபழக்கம் உள்ள கணேசன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி ரம்யா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதனை தொடர்ந்து கணேசன் அதே பகுதியில் வசித்து வரும் தனது தாய் முத்துலட்சுமியின் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிவகாசி அரசு மருத்துவமனையின் அருகில் செல்லும் போது வலிப்பு வந்து மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.