ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.27: ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கூறுகையில், காலை உணவு திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 9 நகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கி வந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூரை பொறுத்தவரை மொத்தம் சுமார் 3,000 மாணவ, மாணவிகள் இந்த திட்டங்களில் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார நல அலுவலர் கந்தசாமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.