காரியாபட்டி, செப்.25: காரியாபட்டியில் விதிமீறி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றுவதாக விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று விருதுநகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வராஜ், காரியாபட்டி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அனுமதிச்சீட்டு, தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கி வந்த நான்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அதிகபட்ச அபராதமாக தலா ஆட்டோ ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் விதிமீறி இயங்கிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.