விருதுநகர், செப்.25: பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 38 நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வாரிசு பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர்ந்து 38வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மோகன்ராஜ் தலைமை வகித்தார். துவக்கி வைத்து சிஐடியு மண்டல பொருளாளர் திருப்பதி பேசினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, ரவிச்சந்திரன், காத்தப்பன், ராஜேந்திரன், பொன்னுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட செயலாளர் போஸ் நிறைவில் பேசினார்.