சிவகாசி, செப்.23: சிவகாசி ரயில்வே மேம்பாலம் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் திராவிட மாடல் அரசில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவகாசி பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் அதனை தவிர்க்கும் பொருட்டு சாட்சியாபுரம், திருத்தங்கல் ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
+
Advertisement