ஏழாயிரம்பண்ணை, செப்.23: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பட்டாசு தொழிலின் மூலம் நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில்தான் தயாரிக்கப்படுகிறது.
+
Advertisement