ராஜபாளையம், செப்.23: ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளிலும் நீரோடைகள் வாறுகால் பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளர்களைக் கொண்டு மாஸ்க் கிளீனிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நகர் பொதுமக்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், நகராட்சி 3வது வார்டு அழகாபுரியில் மாஸ் கிளீனிங் நடைபெறும் பகுதியை, நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன், சுகாதார அதிகாரி சக்திவேல் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement