சிவகாசி, ஆக.23: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் கிழக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த ஊரின் வடக்கு தெருவில் வசித்து வரும் முருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார் பட்டாசு தயாரிக்க தேவையான வேதிப்பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.
+
Advertisement