சிவகாசி, ஆக.23: வீட்டில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதம்(27). இவரது வீட்டின் மாடி அறையில் கடந்த 19ம் தேதி திடீரென பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது வீட்டின் மாடியறையில் இருந்த கவுதம் பலத்த தீக்காயமடைந்தார்.
80 சதவிகித தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.