சிவகாசி, நவ. 22: சிவகாசியில் நடந்த டூவீலர் விபத்தில் பட்டாசு ஆலை மேனேஜர் பலியானார். சிவகாசி பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (30). சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பிரபல பட்டாசு ஆலையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து டூவீலரில் வெளியே சென்று விட்டு இரவு 11.15 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். விருதுநகர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டூவீலர் மகேஸ்வரன் டூவீலர் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர் திசையில் டூவீலர் ஓட்டி வந்த ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த பாதமுத்து (26), திருத்தங்கல் பாண்டியன்நகர் 6வது தெருவை சேர்ந்த வினோத்குமார் (24) காயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


