சிவகாசி, செப்.22: சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சின்ன முனியாண்டி (49). இவரிடம், 15 வயது சிறுவன் மதுபோதையில் ஓசியில் பீடி கேட்டுள்ளார். அதற்கு அவர், சிறுவர்களுக்கு பீடி தர மாட்டேன் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் அங்கிருந்த கம்பை எடுத்து சின்னமுனியாண்டியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement